• By ADMIN
  • Posted 01 Nov, 2019
  • 706
  • 0

பிரார்த்தனை!!!!

எவ்வளவு பெரிய உலகம்!!!

எத்தனை அழகான படைப்பு!!!

இறைவா, உம்முடைய படைப்புகளையெல்லாம் ரசிப்பதற்கே என்னுடைய வாழ்நாள் போதாது போலும்!!!

இறைவா,

1. நான் படித்ததற்கு உண்டான தகுந்த வேலையை தேடி ஓடவா?

2. நான் புகழ்தேடி ஓடவா?

3. இல்லை வாழ்வாதாரத்திற்கு உண்டான பொருளாதார வசதிகளைத் தேடி ஓடவா?

4. எதிர்காலத்தில் வராத துன்பங்களுக்கெல்லாம் வரும் என்று எண்ணி கவலைப் படுவதற்கு நேரம் ஒதுக்க வா?

5. என்னை சுற்றி இருக்கும் எதிர்மறை எண்ணம் கொண்ட மனிதர்களுக்கு பதிலளிப்பதற்காக என்னை தயார் செய்து கொள்ள வா?

6. இல்லை நான் செய்து கொண்டிருக்கும் அத்தனை காரியங்களும் சரி என்று இந்த உலகிற்கு உணர்த்த முட்டி மோதி போராடவா?

என் பொன்னான நேரத்தை எல்லாம் இதற்கு ஒதுக்குவதற்கு எனக்கு சற்றும் விருப்பமில்லை, விருப்பமில்லை!!

இறைவா, நீர் படைத்த அத்தனை ஜீவராசிகளுக்கும் வேண்டியதை அருளும் என்னுடைய இறைவனை, நீ எங்கு இருப்பினும், அல்லது என்னுள்ளே இருப்பினும்,

இங்கே வா!

என்னோடு வா!

என்னுடனே இரு!

எனக்கு வேண்டியது அனைத்தையும் தா!

சுலபமாக தா!

பயனுள்ள காரியங்களுக்கே என்னுடைய நேரத்தை செலவிடு!

நான் வியந்து பார்த்த அத்தனையும் எனக்கு சாதாரணமாகி கொடு!

கடினப்பட்டு வரும் பணம் எனக்கு தேவையில்லை, இன்பமாய் வாழ வழி செய்து கொடு,

மழையைப் பார்த்தாலும் வெயிலை பார்த்தாலும் ரசிப்பதற்கு மனம் கொடு!

காலங்கள் கடந்து எனக்கு வயது ஆனாலும்,

முதுமை வேண்டாம் முதிர்ச்சி மட்டும் கொடு!

இப்பொழுது இருக்கும் என் குழந்தை சிரிப்பை எப்பொழுதும் எனக்கே வசமாக்கி கொடு!

லஞ்சம் ஊழல் இவையெல்லாம் இல்லாத ஒரு வாழ்க்கை கொடு!

என்னை சுற்றி எல்லாமே நேர்மையாகத்தான் நடக்கின்றது என்ற செய்தியை மட்டும் என் காதுக்கு கொடு!

எனக்குப் பிடித்தவர்கள் எல்லாம் என் அருகிலேயே இருக்க வசதி செய்து கொடு!

என் முடிவுகள் எல்லாம் எப்பொழுதும் என் வசமே இருக்க தைரியம் கொடு!

என் காரியங்கள் அத்தனையும் லேசாகி கொடு!

என்னை ஆழமாய் நேசிக்கும் என் இரண்டாவது அப்பா- என் கணவருடைய அன்பை இப்பொழுது போல் எப்பொழுதும் அதிகரித்தே கொடு!!!

என் உயிரும் என்னை சுற்றி இருக்கும் அத்தனை உயிர்களும் இன்புற்று வாழ வழி செய்து கொடு!!

என்னோடு நீ இரு!

என் வாழ்வில் நீ கொடுத்த ஒவ்வொரு வினாடிக்கும் என்றும் நன்றி உணர்வோடு நிறைந்திருக்கிறேன்.

என்றும் உனது மனம் நாடும்,

திருமதி வளர்மதி சீனிவாசன்.

நிறுவனர்

புரோட்டான் அகாடெமி

 


Comments (0)

No comments posted